News November 25, 2025
உங்களுக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்புங்கள்: PM மோடி

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்ப வேண்டும் என PM மோடி அறிவுறுத்தியுள்ளார். அயோத்தியில் <<18383307>>கொடி ஏற்றி<<>>ய பின் பேசிய அவர், அதீத பக்தி உணர்வு மூலமாகவே ராமர் நம்மை தொடர்புகொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், நாம் ராமரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவரை புரிந்து கொண்டு, அவரை உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றும் PM வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 5, 2026
மாயவரம்: 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் – ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான விற்பனை கூடங்கள் தேர்தலையொட்டி வரும் 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23ஆம் தேதி மூடப்படுகிறது. அதேபோல் தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ஆம் தேதியும் மூடப்படும். மேற்கண்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News April 5, 2026
RBI தங்கம் கொள்முதல் பாதியாக குறைந்தது!

தங்கம் கொள்முதலை RBI குறைத்துள்ளது. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் துருக்கி 8 டன், ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. 2025-ம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 26 டன் தங்கம் கொள்முதல் செய்த RBI, இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் மாதத்திற்கு 12.5 டன் மட்டுமே வாங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மந்தநிலையில் நீடித்து வருகிறது.
News April 5, 2026
பரப்புரையை தொடங்குகிறார் அண்ணாமலை

பாஜகவின் நட்சத்திர பரப்புரையாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இன்று முதல் அண்ணாமலை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். கோவை வடக்கு தொகுதியில், வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து, நாளை அவிநாசி தொகுதியில் L.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.


