News November 20, 2025
உக்ரைன் போர்: ரஷ்யா பக்கம் சாய்கிறதா அமெரிக்கா?

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதிய அமைதி திட்ட வரைவை USA முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், உக்ரைன் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை ரஷ்யாவுக்கு, விட்டுக்கொடுக்கவும், தனது ராணுவ படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்துகிறது. இது உக்ரைனுக்கு பின்னடைவாக இருக்கும் என கூறும் நிபுணர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவாக USA மறைமுகமாக செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
Similar News
News November 23, 2025
நாகை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 23, 2025
விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 23, 2025
விலை கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

TN-ல் தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ₹50 – ₹60-க்கும், சில்லறை விற்பனையில் ₹80 – ₹100 வரை விற்பனையாகிறது. அதேபோல், சாம்பார் வெங்காயம் கிலோ ₹70 – ₹80, கத்தரிக்காய் ₹50 – ₹70-க்கு விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ₹58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


