News March 20, 2024
ஈரோட்டு: டிராக்டரை சேதப்படுத்திய காட்டு யானை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமைன்புரம் கிராமத்தில், விவசாயி துரைசாமி என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
Similar News
News October 17, 2025
ஈரோடு மக்களே தீபாவளி அன்று ஜாக்கிரதை!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அதில், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் அல்லது முதியவர்கள் முன்னிலையில் வெடிப்பது நல்லது. தீ பற்றவைத்த பட்டாசுகளிடமிருந்து இடைவெளிவிட்டு நிற்கவும். பட்டாசு வெடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக ஒரு வாளி தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஈரோடு மாவட்ட காவல் இரவு ரோந்து அதிகாரிகளின் பட்டியல்

ஈரோடு மாவட்டம் காவல்துறை சார்பாக இன்று 16/10/2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரி அவர்களின் பெயர் பட்டியல். அவசர உதவிக்கு டயல் 100 மற்றும் சைபர் கிரைம் 1930 குழந்தைகள் உதவி எண் 1098 அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஈரோடு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

1)ஈரோடு அருகே நள்ளிரவில் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல்,
2)பர்கூரில் 500 கிலோ குட்கா கடத்திய ஒருவர் கைது,
3)சென்னிமலை அருகே ரேசன் பொருள் கடத்தல், போலீஸ் விசாரணை,
4) தாளவாடி மலைப்பகுதியில் இயக்கப்படும் தரமற்ற பேருந்துகள்.
5) முக்கிய பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது.