News September 5, 2025
ஈரோட்டில் SUPER வேலை அரிய வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Telecaller பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News September 6, 2025
ஈரோடு அருகே 17 வயது சிறுவன் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் பிரகதீஸ் (17) இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் நண்பர்களுடன் குளிக்க வந்த போது எதிர்பாராத விதமாக வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
News September 5, 2025
ஈரோட்டில் இலவசமாக செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக “இலவசமாக செல்போன் பழுது நீக்குதல் (Cellphone Repairs & Service) ” 08-09-2025 முதல் 14-10-2025 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது, பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம், பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
News September 5, 2025
ஈரோடு: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். யாருக்காவது பயன்படும் ஷேர் பண்ணுங்க.!