News October 23, 2024

ஈரோட்டில் 4 இடங்களில் பட்டாசு கடை

image

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் போலீஸ் கேண்டீன் சார்பில் பட்டாசு கடை அமைக்கப்படும். நடப்பாண்டும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்படி எஸ்.பி., அலுவலக போலீஸ் கேண்டீன், ஈரோடு ஆயுதப்படை வளாகம், கோபி, சத்தி என நான்கு இடங்களில் வரும், 26ம் தேதி முதல் பட்டாசு கடை துவங்குகிறது.இங்கு ‘கிப்ட் பாக்ஸ்’ மட்டும் விற்பனை செய்யப்படும்.போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கி கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 26, 2026

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கணபதிபாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னமாபுரம், பாசூர், காங்கேயம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுதூர், வேங்கியம்பாளையம், உத்தாண்டிபாளையம், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோல்பாளையம், கினிப்பாளையம், கரட்டூர், பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 26, 2026

சென்னிமலை அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

image

சென்னிமலை அருகே 14வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தாய் அவரை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமி 22 வார கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், கடந்த ஜூன் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர்(19) என்ற வாலிபர், சிறுமியை மிரட்டி நள்ளிரவில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது. இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீஸார் வாலிபர் கைது செய்தனர்.

News January 26, 2026

ஈரோடு அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது

image

பவானிசாகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பவானிசாகர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி எரங்காட்டூர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். மேலும் கடை உரிமையாளர் தாஹிரா பானு என்பவரை கைது செய்த போலீசார், 4000 ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!