News April 2, 2025
ஈரோட்டில் வேலை வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (BANKING TRAINEE)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000- ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News April 8, 2026
ஈரோட்டில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (26). இவருக்கும் 27 வயது இளம்பெண் இடையே பழக்கம் இருந்துள்ளது. சமீபகாலமாக அந்தப் பெண் மாதேஷைத் தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த அவர், நேற்று அப்பெண்ணின் கழுத்தில் கத்தியால் கீறியுள்ளார். இதில் காயமடைந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.
News April 8, 2026
சென்னிமலை: ”ஓட்டு கேட்டு வராதீர்கள்” VIRAL PHOTO

சென்னிமலை பசுவபட்டி ஊராட்சி வெங்கமேடு கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளனர். “எங்கள் ஊருக்குள் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம்; இனி அரசியல்வாதிகளை நம்பி ஏமாற மாட்டோம்” என அதில் குறிப்பிட்டுள்ளனர். பல வருட கோரிக்கைகள் நிறைவேறாததால் மக்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
News April 7, 2026
BREAKING கோபி: தவெக செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை, அதிமுக-வினர் அளித்த ஆட்சேபனையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், பிரமாணப் பத்திரத்தில் இருந்த பிழைகள் குறித்து அவர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்ததையடுத்து, அவரது வேட்புமனு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.


