News October 25, 2024
ஈரோட்டில் வெளுத்து வாங்கிய மழை: இங்குதான் அதிகம்!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக சத்தியமங்கலம், பவானிசாகரில் 85.60 மி.மீ. மழை பதிவானது. இதேபோல் கொடிவேரி-13.20, நம்பியூர்-3, சத்தி-51, தாளவாடியில், 22 மி.மீ. மழை பதிவானது. மழைக்கு பெருந்துறையில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
Similar News
News February 5, 2026
ஈரோட்டில் தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் கைது!

பங்களாப்புதூர் அருகே கட்டிடத்து பிள்ளையார் கோவில் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த சகிப் (25) மற்றும் முகமது நயும் சர்கார் (19) ஆகிய இருவரைப் போலீசார் கண்டறிந்தனர். ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
News February 5, 2026
கொடுமுடி அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

சேலம் மாவட்டம் மேட்டூர் தெர்மல்நகரை சேர்ந்த ரமேஷ்குமார் 45 என்பவர், தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆரம்பாளையம் அம்பேத்கர்நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு ரமேஷ்குமார் உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி இறந்தார். கொடுமுடி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் “இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்” வரும் 14/02/2026 வரை நடைபெற உள்ளது. எனவே மக்கள் அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உங்கள் கோழிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், அதிகபட்சமாக 6 மாதத்திற்குள்ளும் தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி,தெரிவித்துள்ளார்.


