News December 16, 2025
ஈரோட்டில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், செல்வ விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சகானி (52), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 7 ஆண்டுகளாக ஈரோட்டில் டைல்ஸ் வேலை செய்த அவர், நேற்று அதிகாலை அருகிலுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் கை, கால் கழுவ முயன்ற போது விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
ஈரோடு: Driving Licence இருக்கா? முக்கிய Update!

ஈரோடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 19, 2025
ஈரோடு: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.<
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
JUSTIN: ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

ஈரோடு, சென்னிமலை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் நேற்று முந்தினம் இரவு, சென்னிமலை ஊத்துக்குளி சாலையில் ஓரமாக நின்றுள்ளார். அப்போது ஊத்துக்குளி திசையிலிருந்து சென்னிமலை நோக்கி அதிவேகமாக வந்த கார், முத்துசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முத்துசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


