News November 23, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டறிந்தனர். வீட்டிற்குள் சோதனை செய்தபோது ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தனுஷ் ,குரு பிரகாஷ் இருவரை கைது செய்தனர்.
Similar News
News January 29, 2026
ஈரோடு அருகே சோகம்: கிணற்றில் தவறி விழுந்து பலி!

ஈரோடு சிவகிரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. கட்டடத்தொழிலாளியான இவருக்கு, மதுப் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 20ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் இவர் கிடைக்காத நிலையில், கடந்த 27ம் தேதி இரவு பொரசபாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 29, 2026
ஈரோடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 29, 2026
ஈரோடு: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


