News October 19, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் கனிராவுத்தர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுகிறதா என சோதனை செய்தனர். அப்போது தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Similar News

News October 21, 2025

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி

image

சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, எளையாம்பாளையம் பகுதியில் கால்நடை வழக்கம் ருக்குமணி என்பவரது பட்டியல் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை விரட்டி கடித்ததில் இரண்டு ஆடுகள் இறந்துவிட்டது. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்தது. உடனடியாக கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சிகிச்சை அளித்தார். வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

News October 20, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்காக உட்கோட்ட காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளலாம், அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்னை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்து அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது.

News October 20, 2025

ஈரோடு அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ஈரோடு, பர்கூர் தாமரைக்கரையிலிருந்து ஈரட்டி செல்லும்வழியில், ஆப்பகூடல் கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரம் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் உடலை கைப்பற்றி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

error: Content is protected !!