News September 19, 2025
ஈரோட்டில் லஞ்சம் கேட்டா உடனே Call!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsperddvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது என்ற 0424-2210898 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
ஈரோடு: மனைவியுடன் சண்டயால் தற்கொலை!

ஈரோடு: என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி விக்னேஷ் (30). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 16ஆம் தேதி மது போதையில் தனது மனைவி கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 19, 2025
ஈரோடு – செங்கோட்டை ரயில் சேவை பகுதி ரத்து

ஈரோடு – கரூா் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஈரோடு – செங்கோட்டை (16845 / 16846) ரயில் சேவை வருகிற 22, 25, 28, 30, அக். 3, 6 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு – கரூா் சேவை ரத்து செய்யப்பட்டு, கரூா் – திண்டுக்கல்- கரூா் இடையே மட்டும் இந்த ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
ஈரோடு: டிகிரி முடித்தால் அரசு வேலை!

ஈரோடு மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <