News January 9, 2025
ஈரோட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் இருந்ததும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 13, 2025
ஈரோடு: பெண்களுக்கு இலவச தையற்கலை பயிற்சி

சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லூரி சாலை, வாசவி காலேஜ் அருகில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் 20-12-2025 முதல் 31-01-2026 வரை நடைபெற உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 87783-23213, 72006-50604, 0424-2400338 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
ஈரோடு:பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News December 13, 2025
பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு!

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபண்ணாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான குண்டம் திருவிழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 16 பங்குனி 2-ம் நாள் திங்கட்கிழமை பூச்சாட்டு விழா ஆரம்பம். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபூஜை (6-4-26) அன்று நடைபெறவுள்ளது.


