News January 22, 2025

ஈரோட்டில் ரயில் மோதி தொழிலாளி பலி!

image

ஈரோடு,கொல்லம்பாளையம் காட்டு தெருவில் வசித்த தொழிலாளி மூர்த்தி 56. பொங்கல் பண்டிகைக்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. எட்டு ஆண்டுகளாக காது கேட்காது. நேற்று மதியம் ஊஞ்சலுார்-பாசூர் ரயில்பாதையை கடக்க முற்பட்டார். அப்போது ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மோதியதில், தலை துண்டாகி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News September 15, 2025

மலேசியாவில் மாஸ் காட்டிய ஈரோடு வீரர்கள்!

image

மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், ஈரோடு கலைத்தாய் அமைப்பு சார்பில் சிலம்ப ஆசிரியர் மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்தப் போட்டியில் வைஷ்ணவி, சுதர்ஷன், அபுஜெய் நிகிலேஷ், அக்ஷயா, பிரம்மதீஷ் ஆகியோர் பதக்கங்களைக் குவித்தனர். வெற்றிபெற்று ஈரோடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News September 15, 2025

ஈரோடு: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

ஈரோடு: மின்சாரத்துறையில் 1543 காலிபணியிடம்!

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.17-க்குள் விண்ணபிக்கலாம். இத்தகவலை இன்ஜினியர் முடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!