News August 8, 2024
ஈரோட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை: உதவித்தொகை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) உள்ளன. இதில் நடப்பாண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் ஆகஸ்டு 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
ஈரோட்டில் முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சிஇஓ) சுப்பாராவ் பணியாற்றி வந்தார். இவர், சென்னை தொடக்க கல்வி இயக்கத்தின் துணை இயக்குநராக (நிர்வாகம்) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்னார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக (டிஇஓ) பணியாற்றி வந்த இமான்விழி முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
News November 6, 2025
புளியம்பட்டி அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

ஈரோட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் நேற்று மாலை கேரளாவில் வாழைக்காய் லோடு இறக்கிவிட்டு மினி லாரியில் புளியம்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அன்னூர்-சத்தி சாலை அருகே சத்தியிலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ்சும், மினி லாரியும் திடீரென்று மோதிக்கொண்டன. இதில், லாரி டிரைவர் சதீஸ்குமார் படுகாயம் அடைந்து சம்பவயிடத்திலே இறந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்
News November 6, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கினார் வெளியூர் சென்று திரும்பும் நபர்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஏறும் போது நமது செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை நமது பாதுகாப்பில் மட்டும் வைத்துக் கொள்ளவும்.
அவசர உதவிக்கு டயல் 100 பயன்படுத்திக் கொள்ளவும்


