News February 27, 2025
ஈரோட்டில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மார்ச் 15 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மேலும் தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் பங்குபெற படத்தில் உள்ள QR – யை ஸ்கேன் செய்து கட்டாய முன்பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News March 9, 2026
கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலை திறப்பு

கொடுமுடியில் அமைந்துள்ள மறைந்த பழம் பெறும் நடிகையும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான பத்ம ஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
News March 8, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098
News March 8, 2026
ஈரோடு: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

ஈரோடு மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <


