News April 19, 2025
ஈரோட்டில் பொதுமக்கள் அடித்ததால் உயிரிழந்த நபர்!

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதி. இவர்கள் வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர், சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜெயலட்சுமி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்து, இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News July 5, 2025
எச்சரிக்கை! ஆன்லைன் நட்பால் ஆபத்து

கரூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (30); இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக உள்ளார். இவர் மொபைல் செயலி மூலம் ஒருவரிடம் பேசியதில்,பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இதை நம்பி நேற்று முன்தினம் சென்ற ஜெகதீசனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி 30 ஆயிரம் ரூபாய், பைக்கை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் விசாரணை.
News July 5, 2025
பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்டபிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை5) மதியம் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெறவுள்ளது. எனவே நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உற்பத்தி செய்த நாட்டுச்சர்க்கரை 11 மணிக்குள் கொண்டு வரவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News July 4, 2025
ஈரோட்டில் அருமையான வேலை வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Person பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே<