News September 28, 2025

ஈரோட்டில் பரபரப்பு கைது: போலீஸ் அதிரடி!

image

புளியம்பட்டி அருகே உள்ள பனையம் பள்ளி சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பருசா பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் மது விற்பனை செய்து கொண்டு இருந்ததை கண்டறிந்தனர். அவரை கைது செய்த போலீசார் 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 7, 2026

ஈரோடு: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)

News February 7, 2026

புஞ்சைபுளியம்பட்டி: இளம் பெண் தற்கொலை

image

புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19-வயது இளம் பெண்ணின் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம்உடைந்த இளம் பெண், வீட்டின் பின்புறம் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக GH-க்கு அனுப்பி வைத்தனர்.

News February 7, 2026

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!