News November 17, 2024

ஈரோட்டில் தலை துண்டாகி ஒருவர் பலி

image

ஈரோடு ரயில் நிலையம் நடைமேடை 1இல் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அறைக்கு அருகில் தலை துண்டாகி ஒருவர் சடலமாக கிடந்தார். ரயில் நிலையம் மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு வயது 60 இருக்கும். அவர் நீல நிற ஆடை அணிந்திருந்தார். ரயிலில் அடிபட்டு இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News March 1, 2026

ஈரோடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 1, 2026

ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 1, 2026

கோபி தொகுதியில் திமுக வேட்பாளர் இவரா?

image

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்பமனுவை வழங்கினார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக உடனிருந்து அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

error: Content is protected !!