News March 2, 2025
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 15ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம். 0424 2275860, 9499055942 தொலைபேசி எண் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம்.
Similar News
News April 14, 2026
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News April 14, 2026
ஈரோட்டில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News April 14, 2026
ஈரோட்டில் பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஏப்.20 முதல் ஜூன்.02 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. சீருடை, மதிய உணவு இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8778323213, 0424-2400338 என்ற எண்ணில் அழைக்கலாம்.


