News February 5, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் கைது!

image

பங்களாப்புதூர் அருகே கட்டிடத்து பிள்ளையார் கோவில் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த சகிப் (25) மற்றும் முகமது நயும் சர்கார் (19) ஆகிய இருவரைப் போலீசார் கண்டறிந்தனர். ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News

News February 6, 2026

தேசிய குடற்புழு நீக்க நாள் சிறப்பு முகாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. இதில் 1 முதல் 19 வயதுடைய சிறுவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மற்றும் கல்வி நிறுவனங்களில் இலவசமாக வழங்கப்படும். அன்று விடுபட்டவர்களுக்கு பிப்ரவரி 17-ல் மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

ஈரோடு: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>https://vptax.tnrd.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News February 6, 2026

ஈரோடு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

image

ஈரோடு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!