News August 10, 2025
ஈரோட்டில் கூட்டுறவு சங்கத்தில் வேலை: ரூ.76,380 சம்பளம்!

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 59 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News August 10, 2025
ஈரோடு: சகல தோஷங்கள் நீக்கும் கோயில்!

ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் முத்து வேலாயுதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பழைய ஏட்டுச் சுவடி பாடல் ஒன்றில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகி விடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களின் நாக தோஷம் புத்திர தோஷம் உட்பட சகல தோஷங்களையும், பிரச்சினைகளை உடனுக்குடன் தனது பார்வையாலேயே தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. SHAREIT
News August 10, 2025
பெருந்துறை அருகே பைக் மீது லாரி மோதி விபத்து!

ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சிவசக்தி. இருவரும் திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்கின்றனர். நேற்று பைக்கில் சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு சென்றனர். பெருந்துறை அருகே பெரிய வேட்டு பாளையம் பிரிவு அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சிவசக்தி பலியானார் கோவிந்தன் சிகிச்சை பெற்று வருகிறார்.
News August 10, 2025
ஆசனூர் அருகே தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் இருந்து ஈரோட்டிற்கு, தக்காளி பாரம் ஏற்றி சென்ற மினி வேன், தமிழக கர்நாடக எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது, சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பிக்கப் வேணுடன் மோதி விபத்து ஏற்பட்டது. தக்காளி பழங்கள் ரோட்டில் சிதறின. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.