News December 28, 2024

ஈரோட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி தரிசனம்

image

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் சேலம் சட்டக் கல்லூரியில் இன்று (டிச.28) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், கார் மூலம் சேலம் செல்வதற்காக வந்த அவர் ஈரோடு மாவட்டம் வழியாக சென்றபோது பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வந்த அவருக்கு குருக்கள் பூர்ணாபிஷேக மரியாதை செய்தனர்.

Similar News

News April 8, 2026

ஈரோடு: இனி ஆதார் திருத்தங்கள் EASY

image

ஈரோடு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

News April 8, 2026

ஈரோட்டில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

image

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (26). இவருக்கும் 27 வயது இளம்பெண் இடையே பழக்கம் இருந்துள்ளது. சமீபகாலமாக அந்தப் பெண் மாதேஷைத் தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த அவர், நேற்று அப்பெண்ணின் கழுத்தில் கத்தியால் கீறியுள்ளார். இதில் காயமடைந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.

News April 8, 2026

சென்னிமலை: ”ஓட்டு கேட்டு வராதீர்கள்” VIRAL PHOTO

image

சென்னிமலை பசுவபட்டி ஊராட்சி வெங்கமேடு கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளனர். “எங்கள் ஊருக்குள் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம்; இனி அரசியல்வாதிகளை நம்பி ஏமாற மாட்டோம்” என அதில் குறிப்பிட்டுள்ளனர். பல வருட கோரிக்கைகள் நிறைவேறாததால் மக்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!