News August 5, 2024

ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

image

ஈரோடு, அந்தியூர் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு விழா கால சிறப்பு பேருந்து ஈரோடு, பவானி, கோபி, குருவரெட்டியூர், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Similar News

News April 7, 2026

BREAKING கோபி: தவெக செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை, அதிமுக-வினர் அளித்த ஆட்சேபனையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், பிரமாணப் பத்திரத்தில் இருந்த பிழைகள் குறித்து அவர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்ததையடுத்து, அவரது வேட்புமனு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

News April 7, 2026

ஈரோடு: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News April 7, 2026

ஈரோடு: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்

6. குழந்தை தடுப்பூசி

7. 108 அவசர அம்புலன்ஸ்

இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ஈரோடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0424-2431020 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!