News October 15, 2025
ஈரோட்டில் இப்படி ஒரு கிராமமா?

ஈரோடு மாவட்டம், வடமுகம் வெள்ளோடு அருகேயுள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் இங்கு அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக இனப்பெருக்கு சீசன் தொடங்கும். எனவே இங்கு வரும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த ஆண்டு 19வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!
News October 15, 2025
ஈரோடு வருகை தரும் பிரபல பாடகர்கள்!

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரு விக்கிரம நாராயணப் பெருமாள் கோவிலின் புரட்டாசி மாத ஐந்தாவது வாரத்தை முன்னிட்டுச் வரும்அக்.18 மாலை நம்பியூர் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் நாட்டுப்புறக் கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் சரணாலய அமைப்பினர் செய்து வருகின்றனர்.
News October 15, 2025
ஈரோடு: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

ஈரோடு மக்களே கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<