News August 11, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 33.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்
Similar News
News August 12, 2025
ஈரோட்டில் டாஸ்மாக் கடை இயங்காது – ஆட்சியர்

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட்.15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மதுபான, மதுக்கூடங்கள், மதுபான விடுதிகள், பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அன்று முழுவதும் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எனவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
ஈரோடு: அரசு சார்பில் இலவச ஆன்மிகப் பயணம்

ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற ஆக.15 ஆம் தேதியன்று பக்தர்கள் ஆன்மிகப் பயணம் செல்வதற்கு ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் சூரம்பட்டிவலசு, பெரியார் நகர், ஜவான் கட்டிடம், இரண்டாவது தளம் என்ற முகவரியில் நேரில் சென்று பெறலாம். ஈரோடு மக்களே அனைவருக்கும் பகிருங்கள் யாருக்காவது பயன்படும்! SHAREIT
News August 11, 2025
ஈரோட்டில் பெண்களுக்கு இலவசம்: முந்துங்கள்!

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஆக.18 முதல் செப்.24 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0424-2400338 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். ஈரோடு மக்களே SHARE பண்ணுங்க!