News August 22, 2025
ஈரோட்டில் அரசு வேலை கனவா? இங்கே போங்க!

டி.என்.டி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ போட்டி தேர்வுகளுக்கான மண்டல அளவில் இலவச முழு தேர்வு வரும், 23, 30, செப்., 6, 13, 20 ஆகிய நாட்களில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடக்க உள்ளது. இதில் தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும் பயிற்சியுடன், முழு மாதிரி தேர்வு, மென் பாடக்குறிப்பு வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.( ஷேர் பண்ணுங்க)
Similar News
News August 22, 2025
ஈரோடில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்ட தகவலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும் 24ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று வார ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பதிவு செய்பவர்களுக்கு இடம் தெரிவிக்கப்படும். பயிற்சியுடன் பாடக்குறிப்பு, போட்டித் தேர்வு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும்.
News August 22, 2025
ஈரோடு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், இன்று ஆக.,22/கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4(A.M.திருமண மண்டபம், செட்டிபாளையம்), புஞ்சை புளியம்பட்டி நகராட்சி(கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பு.புளியம்பட்டி), காஞ்சிக்கோயில் பேரூராட்சி(தங்கம் மஹால், காஞ்சிக்கோயில்), வெங்கம்பூர் பேரூராட்சி(திருமகள் திருமண மண்டபம், வெங்கம்பூர்).
News August 22, 2025
ஈரோட்டில் பருவ காய்ச்சலை தடுக்க நடவடிக்கை!

ஈரோட்டில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 3 நாளுக்கும் மேலாக காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்கவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.