News October 16, 2024
ஈரோட்டில் அமைச்சர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாநகரம் 44வது வார்டு புதுமை காலனி, நாடார் மேடு பகுதிகளில் மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று கால்வாய்கள் தூர்வாரும் பணியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி கமிஷனர் , ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ,உடன் சென்றனர்.
Similar News
News August 14, 2025
ஈரோடு: ’ஆக.15’ இதைக் கண்டால் உடனே CALL!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேற்று (13.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர், பணியாளர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் உள்ளனர்.
News August 13, 2025
ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை ஆக,14 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. தாளவாடி ஒன்றியம்-சமுதாயகூடம்-சிம்டஹல்லி, சத்தியமங்கலம் ஒன்றியம்-காமாட்சி அம்மன் கோவில் மண்டபம்-அரசூர், மொடக்குறிச்சி ஒன்றியம்-கொங்கு மஹால்-முகாசி அனுமன்பள்ளி, சென்னிமலை ஒன்றியம்-தேவி மஹால்-பாலாஜி கார்டன், பவானி ஒன்றியம்-சிவகாமி மஹால்-சூரியம்பாளையம்.