News August 31, 2025
ஈரோடு: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு<
Similar News
News September 3, 2025
ஈரோடு: ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

ஈரோடு, பவானியைச் சேர்ந்த நாராயணன் என்பவர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு செய்திருந்தார். இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த காரணத்தால், நாராயணன் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை நேற்று வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும், ரூ.2 லட்சம் கிடைக்கும்.விண்ணபிக்க <
News September 3, 2025
வரியை குறைக்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இதன் மூலமாக 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், இதற்காக செயற்கை இழை நூலுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 3, 2025
ஈரோடு: நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 3-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் மல்லிகை அரங்கம் (மாநகராட்சி மண்டலம்-2), கௌதம் மஹால் (கோபி நகராட்சி), வெங்கடேஸ்வரா மண்டபம் (எலத்தூர் பேரூராட்சி), பொன்முத்து மஹால் (கொடுமுடி பேரூராட்சி), அம்மன் கோவில் மண்டபம் மற்றும் புதூர் (சென்னிமலை வட்டாரம்), நாகம்மாள் திருமண மண்டபம் (கொத்தமங்கலம் – பவானிசாகர்) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.