News October 13, 2025

ஈரோடு: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

Similar News

News October 13, 2025

ஈரோடு அருகே அருவாள் வெட்டு: ஒருவர் பலி

image

கோபிசெட்டிபாளையம் உள்ள டி என் பாளையத்தில் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள அணையில் மீன் பிடிக்க உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனர். சௌந்தர்ராஜன்(24), கௌதம்.(23) நேற்று இரவு அத்துமீறி மீன் பிடிக்க சென்றதாக நரசாபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன், அவர் மகன் மாதேஷ் தட்டி கேட்ட போது சௌந்தர்ராஜன் மற்ற இருவர் சேர்ந்து ஐயப்பனையும், மாதேஸையும் அருவாளால் வெட்டினர். இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News October 13, 2025

கோபி அருகே பெண் விபரீத முடிவு!

image

கோபி அருகே உள்ள கபிலர் வீதியை சேர்ந்த லோகநாதன், அவரது மனைவி லலிதா (40). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகாததால் மனமுடைந்த அவர் நேற்றைய முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 13, 2025

ஈரோடு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!