News May 6, 2024

ஈரோடு : 97.42 சதவீத தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.42 ஆகும். இதில் 9,864 மாணவர்கள், 11,362 மாணவிகள் என மொத்தம் 21,226 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,540 மாணவர்கள், 11,138 மாணவிகள் என மொத்தம் 20,678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்கள் 96.72%, மாணவிகள் 98.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

Similar News

News August 27, 2025

ஈரோடு மக்களே கவனம்! போலீசார் அறிவுறுத்தல்

image

விநாயகர் சிலைகள் இன்று (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. அதன்படி ▶️கொடிவேரி ▶️ புஞ்சைபுளியம்பட்டி ▶️ கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறித்தியுள்ளார்.(SHARE பண்ணுங்க)

News August 27, 2025

ஈரோட்டில் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம்

image

ஈரோடு இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் துவங்கியது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்-ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படயுள்ளனர்.

News August 27, 2025

ஈரோட்டில் 1625 இடங்களில் விநாயகர் சிலைக்கு அனுமதி

image

விநாயகர் சதுர்த்தி விழா இன்று புதன்கிழமை கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கடந்த ஆண்டு ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் புதிய விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து காவல் துறை சார்பில் 1625 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

error: Content is protected !!