News September 15, 2025

ஈரோடு: வீட்டுக்குள் புகுந்த 5 அடிப் பாம்பு!

image

ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரலேகா(30). இவரது வீட்டில் நேற்று(செப்.14) காலை சமையல் செய்வதற்காக வீட்டுக்குள் சென்ற போது பாத்திரம் கீழே விழுந்து உள்ளது. அப்போது அங்கே பாம்பு இருந்தது தெரிய வந்தது. அலறி அடித்து வெளியே வந்த சந்திரலேகா அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் மோகன் என்பவரிடம் தெரிவித்தனர். அவர் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்து வனத்தில் விட்டார்,

Similar News

News September 15, 2025

ஈரோடு: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 15, 2025

ஈரோடு அருகே சோகமான நிகழ்வு!

image

ஈரோடு: பெருந்துறை பெருமாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (40). வியாபாரி. இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்ற அவர், பெருந்துறை துடுப்பதி பாலக்கரை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News September 14, 2025

ஈரோடு: இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை, கொள்ளை, போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள், காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா, புகையிலை, போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.

error: Content is protected !!