News December 25, 2025

ஈரோடு வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

சென்னிமலையில் வசமாக சிக்கிய இருவர்!

image

சென்னிமலை – அரச்சலூர் சாலையில் கார் சோதனையின் போது, புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த ஈரோட்டைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் நாகராஜனை போலீசார் கைது செய்தனர். மளிகைக் கடைகளில் விற்பனை செய்ய இவை கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கார் மற்றும் கடத்தல் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யதனர். மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை!

News December 26, 2025

அந்தியூர் மயங்கி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு!

image

அந்தியூர் தவிட்டுபாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் லோகநாதன். பெயிண்டரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இவர் நேற்று தவிட்டுபாளையம் பகுதியில் மயங்கி விழுந்தார். இவரை பொதுமக்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அந்தியூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

ஈரோடு: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். NPCI என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!