News September 16, 2025

ஈரோடு வருகிறார் தவெக விஜய்!

image

ஈரோடு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பயணத்தின் அடுத்த கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகின்ற 04/10/2025 அன்று வரவிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரின் மக்கள் சந்திப்பிற்கு உரிய பாதுகாப்பும் அனுமதியும் வழங்குமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவிடம் ஈரோடு மாவட்ட தவெக செயலாளர் பாலாஜி தலைமையில் இன்று
(செப்.16) மனு அளிக்கப்பட்டது.

Similar News

News September 16, 2025

ஈரோட்டில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

ஈரோடு மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

ஈரோட்டில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

image

ஈரோடு மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. அரசு ஐடிஐ வளாகத்தின் அருகே வருகிற செப்.19ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறுத்து மேலும் விவரங்களுக்கு 8675412356 எண்ணை அணுகவும். பதிவு செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. (SHARE IT)

News September 16, 2025

ஈரோடு – சம்பல்பூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து காலை 11:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வரும் சிறப்பு ரயில் (08311) நாளை(செப்.17) முதல் வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை (வாரந்தோறும் புதன்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக ஈரோட்டில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11:15 மணிக்கு சம்பல்பூர் செல்லும் ரயில் (08312) நவ.28 வரை (வெள்ளி தோறும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!