News September 9, 2025
ஈரோடு: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.22,000!

ஈரோடு மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 9, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
News September 9, 2025
கால்நடைகளுக்கு கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி

ஈரோடு மாவட்டத்தில் மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்பு துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
ஈரோடு: தவெக விஜய் வருகை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் அக்.4,5ஆம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் பிரச்சார நிகழ்விற்கு தற்போது காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.