News November 19, 2025
ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

ஈரோடு மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News November 19, 2025
ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் ஆன்லைன் தளங்களில் உருவாக்கி முன் பின் தெரியாத நபர்களிடம் இருந்து வீடியோ கால் அழைப்புகள் வரும்என்பதால் எடுக்க வேண்டாம் அவ்வாறு எடுப்பதினால் நமது புகைப்படத்தை பதிவு செய்து ஆபாசமாக
சித்தரித்து நம்மிடம் பணம் பறிக்கக்கூடும் என ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 19, 2025
ஈரோடு: மதுபாட்டில்கள் பறிமுதல்

கடத்தூர் அடுத்த இண்டியம்பாளையத்தில் குள்ளம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகில் உள்ள காலி இடத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. இதையடுத்து கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. அங்கு சென்று பார்த்த பொழுது ஞானசேகரன் என்பவர் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கைது செய்து 111 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
News November 19, 2025
ஈரோடு அருகே சாலையில் சென்றவர் திடீர் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் தாளவாடி கால்நடை மருத்துவமனை அருகே வலிப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நபரை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தாளவாடி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தாளவாடி காவல் துறையினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கோபி கரடிபாளையத்தைச் சேர்ந்த தங்கப்பையன் (44) என்பது தெரியவந்தது.


