News February 28, 2026

ஈரோடு: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு<<>> க்ளிக் செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7- 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க

Similar News

News February 28, 2026

+2 பொதுத்தோ்வு வினாத்தாள் 4 மையங்களில் இருப்பு வைப்பு

image

ஈரோடு,தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு வரும் மாா்ச் 2- ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 26- ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வினை 23,307 மாணவ, மாணவிகளும், தனித்தோ்வா்கள் 669 போ் எழுத உள்ளனா். இவா்கள் தோ்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 107 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை 4 மையங்களில் வைத்து சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News February 28, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

ஈரோட்டில் அரங்கேறிய பகீர் மோசடி! JUDGMENT

image

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தங்களை அதிகாரிகள் என பொய்க்கூறி ஏமாற்றிய ராஜேஸ்வரன் (42) மற்றும் சென்னியப்பன் (40) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

error: Content is protected !!