News March 22, 2024
ஈரோடு : ரூ.96.34 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
ஈரோடு: உங்கள் கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

ஈரோடு மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <
News August 14, 2025
ஈரோடு : பவானி – சித்தோடு சாலை சீரமைப்பு

பவானி-சித்தோடு நெடுஞ்சாலையில் பஸ்கள்,கனரக லாரிகள்,நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதோடு, ஜல்லிகள் பரவலாக கிடந்தது. பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், நேற்று முன்தினம் குண்டும் குழியுமான இடங்களில், கான்கிரீட் போட்டு சாலையை அதிகாரிகள் சீரமைத்தனர்.
News August 14, 2025
ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா

ஈரோடு: ஆனைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.