News January 18, 2026

ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

Similar News

News February 16, 2026

கோபி அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பாரியூர் தொட்டிய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அவரது இருசக்கர வாகனத்தில் மதுபான கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 16, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

image

ஈரோடு மாவட்டத்தின் 10 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் இன்று பிப்ரவரி 16, 2026 மாலை 5:45 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்த முக்கிய வேலைவாய்ப்பு தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 16, 2026

ஈரோட்டில் அதிக அளவு வெயில் பதிவு

image

தமிழ்நாட்டில் நேற்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தினசரி மாலை தொடங்கி மறுநாள் காலை வரை குளிர் வாட்டுகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.8 டிகிரி செல்சியஸ் வெயில் (96.44 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.

error: Content is protected !!