News November 29, 2025

ஈரோடு: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

ஈரோடு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

Similar News

News December 6, 2025

ஈரோட்டில் கோடி கணக்கில் மோசடி: அதிர்ச்சி

image

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் தனியார் சங்கம் சார்பில் அதன் கணக்காளர் ராஜேந்திரன் என்பவர் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பல லட்சங்களை முதலீடு செய்த நிலையில், பணத்தை திரும்பத் தராமல் ரூ.4 கோடி மோசடி செய்ததோடு ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கேட்டு புகார் அளித்துள்ளனர்.

News December 6, 2025

பெருந்துறை: 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை அதிரடி தீர்ப்பு!

image

பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக வெளிநாட்டினா் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி தலைமையிலான போலீஸாா் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News December 6, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்ட காவல்துறை, நேற்று (05/12/2025) இரவு நேர சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு பணிக்காக ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர உதவி தேவையானால், பொது அவசர எண் 100, சைபர் கிரைம் உதவி 1930, குழந்தைகள் உதவி 1098 ஆகிய எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!