News October 1, 2025

ஈரோடு: ரயில் மோதி தொழிலாளி பலி

image

ஈரோடு மாவட்டம் மாவெலிபாளையம் அருகே ரயில் பாதையில் சடலம் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு செப். 28 இரவு தகவல் கிடைத்தது. விசாரணையில், பலியானவர் சேலம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த தறித் தொழிலாளி கோபால் (46) என்பது தெரியவந்தது. கவனக்குறைவாக ரயில் பாதையைக் கடந்தபோது ரயில் மோதி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஈரோடு ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 3, 2026

ஈரோடு: வேட்பாளர் சொத்து விவரங்களை பாக்க! கிளிக் NOW

image

ஈரோடு மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின்<> affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

News April 3, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! முக்கிய தகவல்

image

ஈரோட்டில் ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், வீட்டு சிலிண்டர்கள் தடையின்றி விநியோகிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் குழாய்வழி எரிவாயு (PNG) இணைப்பிற்கு BPCL, IOCL போன்ற நிறுவனங்களில் பதிவு செய்வதன் மூலம் 70% எரிவாயு ஒதுக்கீட்டைப் பெறலாம். குறைகளுக்கு 9790132679 அல்லது 0424-2252052 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். SHAREIT

News April 3, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!