News March 29, 2025

ஈரோடு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

சாம்பல்பூர் – ஈரோடு சிறப்பு இரயில், புதன் காலை 11:35க்கு புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியே மறுநாள் இரவு 8:30க்கு ஈரோடு வந்து சேரும். இந்த இரயிலில், ஏப்.,2 முதல் 30 வரை கூடுதலாக, 3ம் வகுப்பு ஏசி, ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மறுமார்க்க இரயிலில், ஏப்., 4 முதல் மே 2 வரை, அதேபோல் இரு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News February 5, 2026

ஈரோடு: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! APPLY NOW

image

ஈரோடு மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 5, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் கைது!

image

பங்களாப்புதூர் அருகே கட்டிடத்து பிள்ளையார் கோவில் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த சகிப் (25) மற்றும் முகமது நயும் சர்கார் (19) ஆகிய இருவரைப் போலீசார் கண்டறிந்தனர். ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

News February 5, 2026

கொடுமுடி அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

image

சேலம் மாவட்டம் மேட்டூர் தெர்மல்நகரை சேர்ந்த ரமேஷ்குமார் 45 என்பவர், தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆரம்பாளையம் அம்பேத்கர்நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு ரமேஷ்குமார் உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி இறந்தார். கொடுமுடி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!