News September 21, 2025
ஈரோடு: யானை மிதித்து ஒருவர் பலி – சோகத்தில் மக்கள்!

கோபி அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சியில் வினோபாநகர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வன விலங்குகள் நடமாடும் பகுதியாகவும் உள்ளது. இந்த நிலையில் குழந்தைசாமி மகன் பெரியசாமி இவர் விவசாயி. அப்பகுதியில் வசித்து வருகிறார். இவர் அவரது தோட்டத்தில் இன்று யானை மிதித்து இறந்து விட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 21, 2025
ஈரோடு: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே <
News September 21, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “போதைப்பொருள் உங்களை பலவீனமாக்குவதோடு மட்டுமல்லாமல் முட்டாள்களாகவும் மாற்றும்..! Say No To Drug, Say Yes To Life” என்ற முழக்கத்துடன், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருட்களின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
News September 21, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்கள், லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பாரங்கள் ஏற்றுவது வாகனத்தை பழுதாக்குவதோடு விபத்து ஏற்படவும் காரணமாகிறது. எனவே பாரங்கள் ஏற்றி செல்வது, எடையின் அளவு குறித்த விதிகளை எப்போதும் பின்பற்றுவோம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் போலீசார் தெரிவித்தனர்.