News September 16, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்கள், லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பாரங்கள் ஏற்றுவது வாகனத்தை பழுதாக்குவதோடு விபத்து ஏற்படவும் காரணமாகிறது. எனவே பாரங்கள் ஏற்றி செல்வது, எடையின்
அளவு குறித்த விதிகளை எப்போதும் பின்பற்றுவோம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் போலீசார் தெரிவித்தனர்.
Similar News
News September 16, 2025
ஈரோட்டில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

ஈரோடு மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
ஈரோட்டில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஈரோடு மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. அரசு ஐடிஐ வளாகத்தின் அருகே வருகிற செப்.19ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறுத்து மேலும் விவரங்களுக்கு 8675412356 எண்ணை அணுகவும். பதிவு செய்ய <
News September 16, 2025
ஈரோடு – சம்பல்பூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து காலை 11:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வரும் சிறப்பு ரயில் (08311) நாளை(செப்.17) முதல் வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை (வாரந்தோறும் புதன்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக ஈரோட்டில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11:15 மணிக்கு சம்பல்பூர் செல்லும் ரயில் (08312) நவ.28 வரை (வெள்ளி தோறும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.