News March 17, 2025

ஈரோடு மாவட்டத்தில்29 இடங்களில் நில வாழ் பறவைகள் கண்டுபிடிப்பு

image

தமிழ்நாடு வன துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் முடிந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஈரோடு வன சரக ஊழியர்கள், தன்னர்வலர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 5 வன சரகங்களில் 29 இடங்களில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வெள்ளோடு, கனகபுரம், அரச்சலூர்,பர்கூர்,அந்தியூர், சென்னம்பட்டி இதில் மொத்தம் 29 இடங்களில் நில வாழ் பறவைகள் கண்டறிய பட்டுள்ளன.

Similar News

News August 17, 2025

ஈரோடு: இரண்டு சிறுவர்கள் கைது

image

ஈரோடு, சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் பகுதியில், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, 250 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பிரபல கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை செய்த போது, போதை மாத்திரை இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களை பிடித்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.

News August 16, 2025

ஈரோடு: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், பொதுமக்கள் புகார் அளிக்க, 0424-2220101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News August 16, 2025

ஈரோட்டில் இலவச Tally பயிற்சி!

image

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!