News October 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்கள் விடுமுறை!

image

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, ஈரோடு சொசைட்டி, கோபி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.தீபாவளி பண்டிகைக்காக ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு வரும், 20 முதல், 22 வரை, 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சனி,ஞாயிறு விடுமுறை நாட்களை சேர்த்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறையாகிறது.வரும், 23ம் தேதி மஞ்சள் வர்த்தகம் நடைபெறும் என மஞ்சள் கிடங்கு மற்றும் வணிகர் சத்தியமூர்த்தெரிவித்தார்

Similar News

News October 15, 2025

ஈரோட்டில் இப்படி ஒரு கிராமமா?

image

ஈரோடு மாவட்டம், வடமுகம் வெள்ளோடு அருகேயுள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் இங்கு அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக இனப்பெருக்கு சீசன் தொடங்கும். எனவே இங்கு வரும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த ஆண்டு 19வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து வருகின்றனர்.

News October 15, 2025

ஈரோடு: POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

ஈரோடு வீடு கட்ட ரூ.2.10 லட்சம் வேண்டுமா?

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!