News October 13, 2025
ஈரோடு மாவட்டத்தில் 404 பேர் ஆப்சென்ட்

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி மற்றும் வேளாளர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது.மொத்தம், 1901 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,497 பேர் தேர்வை எழுதினர். 404 பேர் வரவில்லை. தேர்வை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Similar News
News April 3, 2026
ஈரோட்டில் நாளை போக்குவரத்து மாற்றம்

ஈரோடு, அருள்மிகு பெரியமாரியம்மன் வகையறா திருக்கோயில்களின் கம்ப ஊர்வலம், நாளை (4/4/26) நடைபெற உள்ளது. இதனால், நாளை பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை ஈரோடு நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. எனவே படத்தில் உள்ள ஈரோடு நகரின் சாலைகளில், பொதுமக்கள் வாகனங்களை ஒட்டி வராமல் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
News April 3, 2026
ஈரோடு: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News April 3, 2026
BREAKING: ஈரோடு (கிழக்கு): காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளரை பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் இதில் ஈரோடு (கிழக்கு) தொகுதி வேட்பாளராக கோபிநாத் பழனியப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.


