News July 17, 2024
ஈரோடு மாவட்டத்தில் வலம் வரும் ஆப்பிள் மேப் வாகனம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஆப்பிள் நிறுவனத்தினர் நவீன வரைபட அடையாளப்படுத்தும் (மேப் அப்டேட்) கருவியை காரில் பொருத்தி வீதி வீதியாக வலம் வருகிறது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி பெற்ற இந்த வாகனங்கள் ஈரோடு மாநகரம், பவானி, கோபி என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 7 வாகனங்கள் வலம் வருகின்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் – சென்னிமலை, வெள்ளோடு ஆகிய பகுதிகளில் வலம் வந்தது.
Similar News
News August 14, 2025
ஈரோடு: நாளை முதல் சேவை தொடக்கம்!

சென்னிமலையில் முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. மலை கோவிலில் தார் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் மலைக்கு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாளை முதல் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கோவில் பஸ் இயக்கபடுகிறது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அறநிலையத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.
News August 14, 2025
ஈரோடு அருகே அரசு பள்ளியில் எம்.பி ஆய்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சிவகிரி – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற தொகுதி நிதியின் மூலம் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நிலத்தடி நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு எம்பி., கே.இ.பிரகாஷ் பங்கேற்று பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பார்த்து ஆய்வு செய்தார்.
News August 14, 2025
ஈரோடு: உங்கள் கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

ஈரோடு மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <