News July 25, 2024
ஈரோடு மாவட்டத்தில் மழை

ஈரோடு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை.25) பிற்பகல் முதல் மழை பெய்தது. அதன்படி, ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல், பவானி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் பிற்பகல் தூரம் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் உருவானது.
Similar News
News March 3, 2026
ஈரோடு: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 3, 2026
பல்வேறு திருட்டு வழக்கு: வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த ராகவன் (எ) கோழிக்கரன்-25 மீது பவானி, பவானிசாகர் பகுதிகளில் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பவானி சிறையிலிருந்த அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News March 3, 2026
ஈரோட்டில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்!

ஈரோடு மக்களே, ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் வேலையில் இருப்பவர்கள் என்று ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, பண மோசடியில் பொதுமக்கள் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் சைபர் க்ரைம் எண்.1930 தொடர்பு கொள்ள கொள்ளலாம் என தெரிவித்தனர்.


