News August 5, 2025
ஈரோடு: மானிய விலையில் மக்காச்சோள விதை விநியோகம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் 5402 ஹைபிரிட் மக்காச்சோள விதை மானிய விலையில் வேளாண்மை துறை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தாளவாடி மற்றும் துணை வேளாண்மை மையம் அறை பாளையம் ஆகிய கிடங்குகளில் இருப்பு உள்ளது, தேவைப்படும் விவசாயிகள் தாளவாடி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும் தொடர்பு எண் 9688491749.
Similar News
News August 5, 2025
காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவின் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் நலன் கருதி இன்று (05.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
News August 5, 2025
ஈரோடு: வட மாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஒடிசா மாநிலம், பர்கோச்சா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ஜக்தலா, 48. இவர் கடந்த 4 மாதங்களாக சிப்காட் பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காலை வேலைக்கு சென்றவர் அங்கு மேற்பார்வையாளர் இடத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியவர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 5, 2025
புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அந்தியூர் புதுப்பாளையத்தில் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை குருநாதசாமி கோவில் தேர் திருவிழா கால்நடை சந்தையுடன் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் விழாவிற்கு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.