News August 20, 2025
ஈரோடு: மனைவிக்கு கணவர் கத்தி குத்து!

ஈரோடு: சூரம்பட்டியைச் சேர்ந்த தம்பதி மாதேஸ்வரன் (36) – கோகிலா (33). இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக 1½ மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து ஈரோடு பெரியார்நகரில் உள்ள தாய் வீட்டில் கோகிலா வசித்து வந்தார். இந்நிலையில், பெரியார்நகர் வந்த மாதேஸ்வரன், கோகிலாவுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரைக் கத்தியால் குத்தினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 20, 2025
ஈரோடு: காதலித்த பெண்ணை கடத்திய பெற்றோர் கைது

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையைச் சேர்ந்த காதல் தம்பதிகள் விஜய் (22) மற்றும் அர்ச்சனா (20) மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(ஆக.19) அர்ச்சனாவின் பெற்றோர்கள் அர்ச்சனாவை காரில் கடத்தி சென்றனர். அர்ச்சனாவின் கணவர் விஜய் சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த பேரில் பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர்.
News August 20, 2025
ஈரோடு: விநாயகர் ஊர்வல விதிமுறை விளக்க கூட்டம்

ஈரோடு: வருகிற ஆக.27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் விதிமுறை விளக்க கூட்டம் ஈரோடு மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமை தாங்கி பேசினார். பாதுகாப்பான முறையிலும் அமைதியான முறையில் விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாட வலியுறுத்தினார்.
News August 20, 2025
ஈரோடு: திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை

ஈரோடு: வெள்ளித்திருப்பூர் அருகே கொமராயனுார், மசக்கவுண்டனுாரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் விவேக்(29). விவசாயியான இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், பாப்பாத்தி காட்டுப்புதுாரில் உள்ள பாட்டி தோட்டத்துக்கு சென்றவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று(ஆக.19) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.